
மீரா கட்சியின் தலைவராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே எஸ்.குமார் கூறிக்கொண்ட வேளையில், நேற்று நடைபெற்ற கட்சியின் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதாக சந்திரகுமணன் கூறிக்கொண்டுள்ளார்.
மீரா எனப்படும் சிறுபான்மையினர் உரிமை செயல் கட்சியின் 2021 /2022 ஆம் ஆண்டுக்கான மாநாடு நேற்று காலை , காஜாங் ஓரியன்டல் ஹோட்டலில் நடைபெற்றது.
ஆர் .ஓ .எஸ் எனப்படும் சங்கங்களின் பதிவதிகாரியின் உத்தரவுக்கு இணங்க இடைக்கால தலைவர் சந்திரசேகரன் மற்றும் தலைமை செயலாளர் கண்ணன் ராமசாமி தலைமையில் நடைபெற்ற நேற்றைய பேராளர் மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து 2023 -2025 ஆண்டுக்கான 22 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்காக நடைபெற்ற தேர்தலில் 24 பேர் போட்டியிட்டனர்.
பி.பிபி கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ ஆர். சந்திரகுமணன் , கண்ணன் ராமசாமி, டாக்டர் கே.எஸ் பாஸ்கரன், யு. எஸ் சுப்ரா , லெம்பா பந்தாய் மூர்த்தி , கார்திகேசு , தீபன், கோத்தா ராஜா லெட்சுமணன், எண்டி செங்கையா, கங்கா தேவி ஆகியோரும், வெற்றி பெற்ற 22 நிர்வாகக் குழு உறுப்பினர்களில் அடங்குவர்.
அதன் பின்னர் 22 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஒன்று கூடி மீரா கட்சிக்கான புதிய தலைவராக டத்தோ சந்திரகுமணனை தேர்வு செய்தனர். மேலும் கட்சியின் துணைத் தலைவராக டத்தோ கிருஷ்ணனும் , மூன்று உதவித் தலைவர்களாக டத்தோஸ்ரீ தெய்வீகன், லெட்சுமணன், கார்த்திகேசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இப்போதைய நிலையில் இரண்டு பிரிவினர் மீரா கட்சியின் பொறுப்பாளர்கள் என கூறிக் கொண்டிருப்பதால் அக்கட்சியின் உண்மையான பொறுப்பாளர்கள் யார் என்பதை சங்கங்களின் பதிவகம்தான் முடிவு செய்யும் .