
கோலாலம்பூர், நவ 27 – அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் துணைப்பிரதமராகவும், மேலும சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அமைச்சர்களாக முன்மொழியப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை தேசிய முன்னணி மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யான ஒன்று என தேசிய முன்ணி தனது அப்பக்கத்தில் விளக்கம் தெரிவித்துள்ளது. தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் Johari Ghani நிதியமைச்சராகவும், Azalina Othman Said சட்ட அமைச்சராகவும், Khalid Nordin கல்வி அமைச்சராகவும், முகமம் அய்மின் பொதுப்பணி அமைச்சராகவும் நியமிக்கப்படுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தேசிய முன்னணி மறுத்துள்ளது.