வாஷிங்டன் , மார்ச் 5 – முகநூல் சமூக வலைத்தளத்திற்கு ரஷ்யா நேற்று தடை விதித்து. அதோடு டிவிட்டரிலும் ரஷ்யா கட்டுப்பாட்டை அமல்படுத்தியது. மேலும் ராணுவம் குறித்து பொய் செய்தியை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் ரஷ்யா விடுத்தது.
ரஷ்ய ராணுவம் குறித்து பொய் செய்தியை பரப்புவோருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத்தில் அதிபர் Vladimir Putin கையெழுத்திட்டார். ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதிக்கும்படி கேட்டுக்கொள்ளும் ரஷ்யர்கள் அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திலும் அவர் கையெழுத்திட்டார்.