
கொழும்பு, மே 17 , முக்கியமான இரண்டு எதிர்க்கட்சிகளின் ஆதரவை இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே பெற்றார். பொருளாதார நெருக்கடிக்க தீர்வு காணக்கூடிய அமைச்சரவை அமைக்கும் அவரது திட்டத்திற்கு எதர்க்கட்சிகளின் ஆதரவு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அமைச்சரவையில் இணையும் திட்டத்தை தாங்கள் கொண்டிருக்காவிட்டாலும் பொருளாதாரத்திற்க புத்தயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்போவதாக எஸ். ஜே . பி கட்சி அறிவித்தள்ளது. மோசமான நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு இப்போதைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு வழங்குவது என முடிவு செய்துள்ளதாக இலங்கை சுதந்திர கட்சியும் கூறியுள்ளது. அதோடு தங்களது கட்சி அமைச்சவையில் இணையவிருப்பதாகவும் அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.