
கோலாலம்பூர், மே 3 – சபாவில் Semporna கடற்கரை உல்லாச தலத்தில் Snorkel முக்குளிப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது உள்நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுப்பயணி ஒருவர் மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார். நேற்று மாலை மணி 4.15 அளவில் 53 வயதுடைய பெண்மணி சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறியதைத் தொடர்ந்து மருதுவமனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன் அவரை காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவர் இறந்துவிட்டதாக மருததுவமனையில் உறுதிப்படுத்தப்பட்டது. படகு மூலம் தரைக்கு கொண்டுவரப்பட்ட அந்த பெண்ணுக்கு அந்த சுற்றுலா மையத்தின் பணியாளர் ஒருவர் சுவாசிப்பதற்கான உதவியை வழங்ககியதாக Semporna போலீஸ் தலைவர் Mohd Farhan Lee Abdullah கூறினார். அந்த பெண்ணுக்கு தனிப்பட்ட குழுவினர் அவசர உதவி வழங்கும் 38 வினாடி காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது.