Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

முடிவுக்கு வந்த 15 மாத போர்; இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பு

இஸ்தான்புல், ஜனவரி-16, இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நிறுத்த உடன்படிக்கை இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால், 15 மாத கால போர் ஒரு முடிவுக்கு வருகிறது.

வரும் ஞாயிறன்று போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக மத்தியஸ்தத்தில் இறங்கிய கட்டார் பிரதமர் Mohammed bin Abdulrahman அறிவித்தார்.

உடன்படிக்கையின் முதல் கட்ட நடவடிக்கையாக 42 நாட்களில் 33 இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவர்; பதிலுக்கு விடுவிக்கப்படவிருக்கும் பாலஸ்தீனப் பிணைக்கைதிகளின் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை.

போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாகப் பின்பற்றப்படுவதை, கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்கா உறுதிச் செய்யும் என Mohammed கூறினார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் ஞாயிறு அமுலுக்கு வரும் வரை இராணுவ நடவடிக்கைகள் இருக்காது என எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

2023 அக்டோபரில் ஹமாஸ் தரப்பு இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

250-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாட்டவர்களும் ஹமாஸ் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதனால் காசா மீது இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை 44,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் பதவி காலத்தை அடுத்த வாரம் நிறைவுச் செய்வதற்குள், இஸ்ரேல்-காசா போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஜோ பைடன் முழு மூச்சாக இறங்கினார்.

அதற்கு இப்போது பலன் கிடைத்திருப்பதால் காசாவில்  அப்பாவி பாலஸ்தீன மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

புதிய அதிபராக தாம் பதவியேற்பதற்குள் போர் முடிவுக்கு வரவில்லை என்றால், ஹமாஸ் தரப்பு பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!