கோலாலம்பூர், ஜன 4 – முட்டை பற்றாக்குறை பிரச்சனை கடுமையாகவில்லை என்பதால் சீனப் புத்தாண்டுக்குப் பிறகு இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என உள்நாடு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே மக்கள் பீதியடைந்து முட்டைகளை வாங்க வேண்டியதில்லை என உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டார் விவகார அமைச்சின் அமலாக்க இயக்குனர் Azman Adam வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். நாடு முழுவதிலும் நேற்றுவரை 91 விழுக்காடு முட்டைகள் வினியோகத்திற்கு கிடைக்கின்றன. இப்போதைய நடப்பு சந்தைக்கு நிலையான மற்றும் போதுமான அளவுக்கு முட்டைகள் வினியோகம் இருப்பதாக Azman Adam விவரித்தார்.
Related Articles
Check Also
Close