Latestமலேசியா

முட்டை இறக்குமதியாளர் வீ கா சியோங் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது ; மக்களவைத் தலைவர்

கோலாலம்பூர், மார்ச் 14 – மலேசியாவிற்குள் முட்டை இறக்குமதி செய்யும் நிறுவனம் , ஆயேர் ஹித்தாம் ( Ayer Hitam ) நாடாளுமன்ற உறுப்பினர் வீ கா சியோங் ( Wee Ka Siong ) மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.

ஏனெனில், நாடாளுமன்ற அவையில் பேசும் எம்.பி -க்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுவதாக, மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல் (Johari Abdul ) தெரிவித்தார்.

வீ கா சியோங், கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மக்களவையில், உள்நாட்டில் முட்டை உற்பத்தியாளர் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு முதலில் அரசாங்கம் தீர்வு காண வேண்டும்; மாறாக விலையில் உயர்வாகவும், அளவில் சிறியதாகவும் இருக்கும் முட்டையை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது தீர்வாகாது என கூறியிருந்தார்.

அதையடுத்து வீ கா சியோங் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக , இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்யும் நிறுவனம் கூறியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!