
முட்டை ஓடுகளை அதிக விலையில் விற்க முடியும் என்பதை அறிந்த நபர் ஒருவர், ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தமது 26 ஆண்டு கால வாழ்க்கையில், முதல் முறையாக முட்டை ஓடுகள் விலை மதிப்புடையவை என்பதை இப்போது தான் அறிந்து கொண்டதாக, கைரூல் எனும் அந்நபர் தமது ட்விட்டர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
முட்டையிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஓடுகளை நல்ல விலையில் விற்க முடியும்.
முட்டை ஓடுகளில் அதிக பயன்கள் உள்ளதால், பெரிய நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து அவற்றை வாங்க தயாராக இருக்கின்றன.
பத்து பெட்டி முட்டை ஓடுகளின் விலை இருநூற்று பத்து ரிங்கிட் வரையில் விற்கப்படுவது தமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, கைரூல் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், கூடுதல் வருமானம் ஈட்ட முட்டை ஓடுகளை சேர்த்து வைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
வைரலாகியுள்ள கைரூலின் அந்த ட்விட்டர் பதிவை இதுவரை, ஐந்து லட்சத்து ஏழாயிரம் பேர் பார்வையிட்டுள்ள வேளை ; மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பகிந்துள்ளனர்.