அலோஸ்டார், பிப் 12 – நாட்டில் பல இடங்களில் முட்டைகள் கிடைக்கவில்லை. முட்டைகளுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால் கேக் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி உணவகங்களை நடத்துவோரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவையை சமாளிக்க தினசரி 10 அட்டைகளைக் கொண்ட முட்டைகள் தங்களுக்கு தேவைப்படுவதாக அலோஸ்டாரில் கேக் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவரும் ஒரு தம்பதியர் தெரிவித்தனர். சில செலவுக் கடைகளில் ஒருவர் A கிரேட் முட்டையில் 10 க்கு மேல் வாங்கமுடியவில்லை என்றும் சில கேக் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். முட்டை பற்றாக்குறை பிரச்சனைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும் என கேக் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்12 hours ago