வாஷிங்டன், பிப் 19 – பிரபல ஃபேஷன் நிறுவனமான விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்தின் மாடல் அழகிகள் உலகளவில் பிரபலம்.
பொதுவாகவே, இந்த நிறுவனத்தைப் பிரதிநிக்கும் மாடல்கள் உயரமான கால்கள், மெலிந்த உடல்கள், பளிச்சென்ற வெளீர் நிறத்தைக் கொண்டவர்களாத்தான் இருப்பார்கள்.
தற்போது, அந்த வரைமுறைகளால் அதிகம் கண்டனங்கள் எழுந்துள்ள வேலையில், விக்டோரியா சீக்ரெட் மாடல்களைத் தேர்ந்தெடுக்கும் தனது அணுகுமுறைக் கட்டுப்பாடுகளைத் தளத்தியிருக்கின்றது.
அந்த வகையில், தங்களுடைய புது தயாரிப்பான Love Cloud உள்ளாடை விளம்பரத்திற்கு, 17 மாடல்களுடன் சேர்த்து down syndrome எனப்படும் மனநலிவு கொண்ட பெண் ஒருவரையும் மாடலாகத் தேர்தெடுக்கின்றது விக்டோரியா சீக்ரேட்.
Puerto Ricanனைச் சேர்ந்த 24 வயதான Sofía Jirau, விக்டோரியா சீக்கிரெட்டின் டவுன் சின்ரோம் கொண்ட முதல் மாடல் நானே என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றார்.