
ஜகர்த்தா, ஜன 9- அமைச்சர்களுக்கு முதல் 100 நாட்களுக்கான முதன்மை நிலை குறியீடான KPI குறித்து விவாதிப்பதற்காக அடுத்த வாரம் அவர்களை சந்திக்கவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு அமைச்சுகள் மற்றும் அமைச்சர்கள் முக்கிய முதன்மை குறியீட்டை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த சந்திப்பு நடத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஒரு மாதம் கடமை ஆற்றியதைத் தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சரும் தங்களது அமைச்சின் முதன்மை அடைவு நிலைக்கான குறியீடு மற்றும் எதிர்பார்ப்புகளை அறிந்துகொள்வதற்கு அவர்கள் விவாதிக்கவிருக்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு அமைச்சுக்கான அவர்களது செயல் மற்றும் KPI குறித்து நாங்கள் அறிவிப்போம் என இந்தோனேசியாவிலுள்ள மலேசியர்களுடன் உரையாற்றியபோது அன்வார் இத்தகவலை தெரிவித்தார்.