Latestஉலகம்சினிமா

முதன் முறையாக தங்களது குழந்தைகளை காட்டிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

சென்னை, அக் 25 – வாடகைத் தாயின் மூலமாக இரட்டை குழந்தைகளைப் பெற்று கொண்ட நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியினர், முதன் முறையாக தங்களது குழந்தைகளைக் காட்டியிருக்கின்றனர்.

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென கடந்த அக்டோபர் 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் . பின்னர் வாடகைத் தாயின் மூலம் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில், கையில் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறும் காணொளியை விக்னேஷ் சிவன் நேற்று வெளியிட்டார். விக்னேஷ் சிவன் தீபாவளி வாழ்த்தை ஒவ்வொரு வார்த்தையாக சொல்ல, அதை நயன்தாராவும் திரும்பச் சொல்லி வாழ்த்து தெரிவித்தார். இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதால் அப்படி ஒரு ஸ்டைலில் அவர்கள் வாழ்த்து சொல்லியதாக நம்பப்படுகிறது. அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!