Latestமலேசியா

முதலாமாண்டில் நுழையும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கட்டாய HIV சோதனையா? ஆழமாக பரிசீலிக்கப்படும்

ஷா ஆலாம், ஆகஸ்ட்-19 – பல்கலைக்கழகங்களில் நுழையும் புதிய மாணவர்களுக்கு HIV பரிசோதனையைக் கட்டாயமாக்கும் பரிந்துரை தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இறுதி முடிவெடுக்கும் முன், அடிப்படை தனிமனித உரிமை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அரசாங்கம் நன்காராயுமென, உயர் கல்வி துணையமைச்சர் முஸ்தபா சக்முட் கூறியுள்ளார்.

இறுதி முடிவை உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சம்ரி அப்துல் காடிர் (Zambry Abdul Kadir) அறிவிப்பார் என்றார் அவர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் HIV நோய் பரவலைத் தடுக்க, முதலாமாண்டில் நுழைவோருக்கு அப்பரிசோதனைக் கட்டாயமாக்கப்பட வேண்டுமென, மாணவர் அமைப்பொன்று கடந்த மாதம் பரிந்துரைத்திருந்தது.

உரியத் தடுப்புக் கொள்கை வகுக்கப்படாததும், மாணவர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டங்கள் போதிய அளவில் இல்லாததும், பல்கலைக்கழக வளாகங்களில் (campus) அப்பிரச்னை மோசமாகி வருவதற்குக் காரணமென Interim Kesatuan Mahasiswa Universiti Malaya அமைப்பு கூறியிருந்தது.

நாட்டில் அரசாங்க – தனியார் உயர் கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்களை உட்டுத்தி 2020-ல் 221 HIV சம்பவங்களுக்கும், கடந்தாண்டு 244 HIV சம்பவங்களும் பதிவானதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!