
புத்ராஜெயா, ஜன 6 – உலகளவில் ஏற்பட்ட விநியோகத் தடையால் தடைப்பட்டிருந்த HPV – Human papillomavirus – சுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருப்பதாக சுகாதார அமைச்சர் Dr. Zaliha Mustafa தெரிவித்தார்.
அந்த தடுப்பூசிக்கான கையிருப்பை பெற்றிருப்பதாகவும், விரைவில் முதலாம் படிவ மாணவிகளுக்கு அந்த தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்குமெனவும் அமைச்சர் கூறினார்.
அந்த நோக்கத்திற்காக சுகாதார அமைச்சு ஒரு லட்சம் சொட்டு HPV தடுப்பு மருந்துகளை வாங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்காக போடப்படும் அந்த தடுப்பூசியை, 2020-லிருந்து 2022 வரையில் 5 லட்சம் பெண்கள் போட்டுக் கொள்ளத் தவறியிருக்கலாமென , கடந்தாண்டு மலேசிய தேசிய புற்றுநோய் கழகம் தெரிவித்தது.