
கோலாலம்பூர்,மார்ச் 10 – 1955-ஆம் ஆண்டு சட்டத்தின் படி, கர்ப்பிணியாக உள்ள தொழிலாளர்களை , முதலாளிகள் வேலை நீக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாக, மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.
பெண் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அந்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த சட்டதிருத்தம் இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், கருவுற்றிருக்கும் கால கட்டத்தில் பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் , அவர்களை முதலாளிகள் பணி நீக்கம் செய்ய முடியாது என சிவக்குமார் குறிப்பிட்டார்.