
கோலாலம்பூர், டிச 5 – பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனைத்துலக வாணிக தொழில்துறை அமைச்சர் தெங்கு ஷப்ருல் அஸிஸ் கலந்துகொள்ளவில்லை. அபு டாபியில் வர்த்தக கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டது. இதற்கு முன் தகவல் வெளியானதைப்போல் தெங்கு ஷப்ருல் உலகக் கிண்ண காற்பந்து போட்டியை பார்வையிடுவதற்காக கட்டாரில் இருக்கவில்லை. அதிகாரப்பூர்வ நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் அபு டாபிக்கு சென்றிருப்பதாக பெரித்த ஹரியான் தகவல் வெளியிட்டது. இன்று அன்வார் தலைமையில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் தெங்கு ஷப்ருலை தவிர இதர அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.