Latestமலேசியா

முதலில் உள்ளூர் மக்களுக்கு உதவுங்கள்; சபா எம்.பி டேரல் லெய்க்கிங் அறைகூவல்

கோலாலம்பூர், நவ 17 – முதலில் உள்ளூர் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவியை அரசாங்கம் வழங்க வேண்டும் என சபா மோயோக் சட்டமன்ற உறுப்பினர் டேரல் லெய்க்கிங் அறைகூவல் விடுத்துள்ளார். இந்நாட்டிலுள்ள பல மாணவர்களுக்கு இன்னமும் உதவி தேவைப்படுகிறது. குறிப்பாக சபாவிலுள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் கல்வி செலவுக்கு அதிக உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே இந்நாட்டிலுள்ள மாணவர்களை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார்.

முதலில் உள்ளூர் மாணவர்களுக்கு உதவிவிட்டு நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் பாலஸ்தீன மக்களுக்கான கல்விக் கட்டனத்தை அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என டேரல் லெய்க்கிங் வலியுறுத்தினார். பாலஸ்தீனர்களுக்கு சலுகை வழங்குவதற்குப் பதிலாக, இலவசக் கல்விக்கு உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் வலியுறுத்தினார். சபாவைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னும் கல்விக் கட்டணம் மற்றும் பிற கல்வி தொடர்பான விவகாரங்களில் உதவி தேவைப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!