குளுவாங், டிசம்பர்-16 – ஜோகூர் குளுவாங்கில், செம்பனை சிறுத் தோட்டக்காரர் ஒருவர், இல்லாத ஒரு முதலீட்டுத் திட்டத்தில் 300,000 ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
பெரிய இலாபம் பார்க்கலாமென facebook-கில் வந்த விளம்பரத்தால் 52 வயது அவ்வாடவர் கவரப்பட்டுள்ளார்.
இதையடுத்து நவம்பர் முதல் இம்மாதத் தொடக்கம் வரை 4 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு கட்டங்கட்டமாக 300,000 ரிங்கிட்டை அவர் மாற்றியுள்ளார்.
ஆனால், போட்ட முதலுக்கான இலாபத்தை எடுக்க முயன்ற போதெல்லாம், சாக்குபோக்கு மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
இதையடுத்தே தாம் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை குளுவாங் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
அது போல மோசடி செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.