Latestமலேசியா

முதலுதவி தெரிந்ததால்தான் என்னால் உதவ முடிந்தது; மாரடைப்பால் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவிய வாசுகி

கோலாலம்பூர், செப் 11 – அச்சம்பவம், அண்மையில், கிள்ளானிலுள்ள, பெட்ரோல் நிலையம் அருகே மாரடைப்பால் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்குப் பெண் கிராப் ஓட்டுனர் ஒருவர் உட்பட அருகில் இருந்த பலரும் ஓடி வந்து உதவி செய்தது, வைரலாகி வலைத்தளவாசிகளின் பாராட்டைக் குவித்தது.

இந்நிலையில், வணக்கம் மலேசியா அவ்வாடவருக்கு முதலுதவி செய்த பெண் கிராப் ஓட்டுனரான வாசுகி கணேசனைத் தொடர்புக் கொண்டது. முன்னாள் தாதியாக இருந்த அனுபவத்தால்தான் அந்த சமயத்தில் அந்த நபருக்கு உதவ முடிந்ததாக கூறுகிறார் வாசுகி.

அந்த காணொளியை இதுவரை அதிகமானோர் பகிர்ந்தள்ள நிலையில், வலைத்தளவாசிகளுக்கு வாசுகி தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
அதுமட்டுமின்றி எவ்வாறு முதலுதவி செய்வது என்பது பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!