
கூச்சிங் , ஏப் 28 – சரவா , கோத்தா சமரஹானில் , கம்போங் சுங்கை பூலோவில் தன்னை தாக்கிய முதலையிடமிருந்து தப்புவதற்காக அதன் கண்ணில் பலமுறை ஆடவர் ஒருவர் குத்தியுள்ளார். சரியான நேரத்தில் எடுத்த முடிவினால் 36 வயதுடைய Sharil Saupi உயிர் தப்பினார். மாலை மணி 4 அளவில் நீர்த் தேக்க பகுதியில் இறால் பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென அவரது காலை கவ்விய முதலை அதனை கடித்து இழுத்தது. முதலையினால் நீரில் இழுத்துச் சென்றது . சுமார் 5 நிமிடம் அந்த முதலையிடம் போராடி அவர் மீண்டார். முதலை தாக்கினால் அதன் கண்ணில் முடிந்தவரை குத்தும்படி வயதானவர்கள் கூறியது எனக்கு ஞாபகம் வந்தது. உடனடியாக அதன் கண்ணில் குத்தியவுடன் கடித்துக்கொண்டிருந்த முதலை என்னை விடுவித்தது என Sharil தெரிவித்தார். இடபுறக் காலில் கடுமையான வலி இருந்தபோதிலும் நீந்தி ஆற்றின் கரையை அடைந்து கிராமவாசிகளின் உதவியை கோரியதாகவும் பின்னர் சரவா மருத்துவமனைக்கு தாம் கொண்டுச் செல்லப்பட்டதால் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.