ஜகர்த்தா, பிப் 9 – கடந்த ஆறு ஆண்டு காலமாக கழுத்தில் மோட்டர் சைக்கிளின் டயர் கட்டப்பட்டிருந்த நிலையில் நீந்தி வந்த இந்தோனேசிய முதலை ஒன்று இறுதியில் சுதந்திரமாக நடமாடும் வாய்ப்பை பெற்றது. இந்தோனேசியாவின் Sulawesi தீவில் மிருகங்களை நேசித்து வந்த ஒருவர் மேற்கொண்ட முயற்சியினால் அந்த முதலையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் டயர் அகற்றப்பட்டது. 4 மீட்டர் நீளம் கொண்ட அந்த முதலை முரட்டுத்தனமான செயல்படும் குணத்தை கொண்டிருந்ததால் அதன் கழுத்தில் டயர் கட்டப்பட்டிருந்தது. ஆனால் முதலையின் உடல் வளரும்போது அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த டயர் மரணத்தை ஏற்படுத்தும் என்பதால் அதன் மேல் அனுதாபம் கொண்டு அந்த டயரை அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்2 hours ago