Latestமலேசியா

முதலை தாக்கிய நான்கு நாட்களுக்குப் பின் மீனவர் உடல் மீட்பு

கோத்தா கினபாலு, மே 15 – நான்கு நாட்களுக்கு முன் முதலை தாக்கியதைத் தொடர்ந்து காணாமல்போன மீனவரின் உடல் இன்று மீட்கப்பட்டது. லஹாட் டத்துவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் Kampung Nala Lama கரையோரத்தில் ஒதுங்கியிருந்த 40 வயதுடைய Rusbin Asri யின் உடல் மீட்கப்பட்டதாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அந்த மீனவரின் குடும்ப உறுப்பினர்கள் அவரது உடலை அடையாளம் காட்டினார். அந்த மீனவரின் உடலில் முதலை கடித்தற்கான நான்கு அடையாளங்கள் காணப்பட்டதாக Lahad Datu OCPD துணை கமிஷனர் டாக்டர் Rohan Shah Ahmad தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!