
ஆஸ்திரேலியாவில், முதலை முட்டையை சேகரிக்க சென்ற 29 வயது ஆடவர் ஒருவர், அந்த கொடிய விலங்கு தாக்கியதில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒதுக்குப்புறமான இடத்திலுள்ள ஆற்றங்கரை ஓரத்தில் முட்டையை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வாடவரை முதலை தாக்கியது.
அதனால் காலில் பலத்த காயங்களுக்கு இலக்கான அவர் ஹெலிகப்டர் வாயிலாக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில், ஆண்டுதோறும் முதலை தாக்கி குறைந்தது ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.