Latestஉலகம்

முதலை வாயில் கையை விட்டு சாகசம்; கையை இழக்குமளவுக்கு வினையில் முடிந்த ஆடவரின் செயல்

முதலைகள் எவ்வளவு கொடூரமான உயிரினம் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். திரையில் பார்க்கும் போது கூட பலருக்கு நடுக்கம் வரும்.

அப்படியோர் உயிரினத்துடன் விளையாட நினைத்தால் என்னாவது? அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தில் முதலையின் அருகே நெருங்கிய ஆடவர் ஒருவர், சாகசம் செய்ய எண்ணி, அதன் வாய்க்குள் கையை விட, அவரது விளையாட்டு அவருக்கே வினையாகிப் போனது.

விலங்கியல் பூங்காவில் பணி புரிபவர் போல் தெரியும் அவ்வாடவரின் கையை முதலை கடித்து, பலமுறை சுழன்றதால் கை எலும்புகள் உடைந்து சதை கிழிந்துத் தொங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

ஃபிகன் (Figen) எனும் பெயருடைய துருக்கிய மாது ஒருவர் தான், பார்க்கவே குலை நடுங்க வைக்கும் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை இதுவரை 4 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். வீடியோவைப் பார்த்த பலர் அதிர்ச்சியில் இருந்து இன்னும் தாங்கள் மீளவே இல்லை என்றும் கூறியிருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!