Latestஇந்தியா

முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்; 156 தொகுதிகளில் தி.மு.க முன்னணி; 78 தொகுதிகளில் அதிமுக

சென்னை, மே 2 – தமிழகத்தின் அடுத்த முதல்வராகிறார் தலைவர் மு.க ஸ்டாலின். தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூடணி 156 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. திமுக மட்டும் தனித்து 122 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 4 தொகுதிகளிலும், வை,கோ தலைமையிலான மதிமுக 4 இடஙகளிலும் முன்னணியில் உள்ளன.
மேலும் சிபி,ஐ மற்றும் சிபி,எம் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 2 இடங்களிலும் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன. சில தொகுதிகளில் 1,000 மற்றும் 2,000 வாக்குகள் வித்தியாசத்தினால் மறு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் மேலும் பல இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 78 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் தொடக்கத்திலிருந்தே முன்னணியில் இருக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால் அக்கட்சியில் அவர் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தி.மு.கவின் கோட்டையாக கருதப்படும் செனையில் அனைத்து 16 தொகுதிகளையும் தி.மு.க முன்னணியில் உள்ளது.

சென்னையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் 30,000 வாக்குகள் வேறுபாட்டில் முன்னணியில் உள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி 69,500 வாக்குகள் பெரும்பான்மையில் ல் வெற்றி பெற்றார். ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை குஸ்பு திமுக வேட்பாளர் டாக்டர் எழிலிடம் தோல்வி கண்டார்.
அதிமுக தலைவர்களில் எடப்பாடி பழனிச்சாமி 60,000 வாக்குகளுக்கும் கூடுதலாக முன்னணியில் இருந்துவருகிறார். அதிமுக மட்டும் 65 தொகுதிகளில் முன்னணியில் உள்ளன. அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சி 3 தொகுதிகளிலும், பாரதீய ஜனதா கட்சி மூன்று தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.

அமமுக தலைவர் டி.டி,வி தினகரன் தலைமையியிலான அணி, விஜய்காந்தின் தே.மு.தி.க , எந்தவொரு தொகுதியிலும் முன்னணியல் இல்லை. நடிகர் சீமான் தலைவமையிலான நாம் தமிழர் கட்சியும் எந்தவொரு தொகுதியிலும் முன்னணியில் இல்லை. நடிகர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் பின்னடைவில் இருந்து வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!