
கோலா திரங்கானு, மார்ச் 12- தொழுகைக்கு முன் நீரில் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த முதியவர் ஒருவரை முதலைத் தாக்கியது. கோலாத் திரெங்கானு Manir-க்கு அருகே , Padang Papan-னில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் முதலையினால் தாக்கப்பட்டட 61 வயதான அந்த முதியவர் வலது கையில் காயங்களுக்கு உள்ளானார். மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள Che Man Zakaria என்ற அந்த முதியவர் இரவு 7.25 மணியளவில் மக்ரிப் தொழுகைக்கு முன் சதுப்பு நிலப்பகுதியில் உள்ள நீரில் உடம்பை சுத்தம் செய்து கொண்டிருந்த போது இந்த தாக்குதலுக்கு உள்ளானார். சுல்தானா நுர் ஜஹிரா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கையில் 12 தையல்கள் போடப்பட்டது.