
கோலாலம்பூர் , மார்ச் 15 – பொறுப்பற்ற பிள்ளைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் விவகாரம் குறித்தும், முதியோருக்கான சட்ட மசோதாவில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த சட்டமசோதா அடுத்தாண்டு மக்களவையில் முதல் வாசிப்புக்கு உட்படுத்தப்படுமென எதிர்பார்ப்பதாக, மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் அய்மான் அதிரா சாபு (Aiman Athirah Sabu) தெரிவித்தார்.
முதியோர்களின் நலனைப் பாதுகாக்கும் அதே வேளை, 20230 –இல் வயோதிகர்கள் அதிகம் வசிக்கும் நாடு எனும் அந்தஸ்தை மலேசியா பெறவிருக்கும் நிலையில், அதற்கு தயாராகும் வகையிலும், அந்த சட்ட மசோதா வரையப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.