பேர்ன்,பிப் 8 – முதுகெலும்பு முழுமையாக துண்டிக்கப்பட்டு உடல் செயலிழந்த நபர் மீண்டும் நடக்கத் தொடங்கியிருக்கும் அதிசயம் உலகில் முதல் முறையாக நடந்திருக்கிறது. சுவீஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கும் implant சிகிச்சை முறையின் கீழ், Michel Roccati மீண்டும் எழுந்து நடக்கத் தொடங்கியிருக்கிறார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு, மோட்டார் சைக்கிள் விபத்தில் முதுகெலும்பு முழுமையாக துண்டிக்கப்பட்ட Michel Roccati- யால் தனது காலில் எதையும் உணர முடியாது. அவரது முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சையின் மூலமாக, மின்னியல் implant தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு, தற்போது அவர் எழுந்து நடக்கத் தொடங்கியுள்ளார்.
Michel Roccati -யைப் போன்று மோசமாக காயமடைந்த ஒருவர் , இதுவரை மருத்துவ ரீதியாக யாரும் எழுந்து நடந்ததில்லை எனக் கூறியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.