
கோலாலம்பூர், செப் 11 – முன்னால் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி முதுமை மறதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார். தமது துணைவியார் ஜீன் அப்துல்லா, மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை கூட அவரால் நினைவுகூற முடியவில்லையென கைரி தெரிவித்தார். பலர் பாக் லா எங்கே என வினவுகின்றனர். அவர் அதிக மறதியால் அவதிப்படுகிறார். முதுமை மறதியால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என அப்துல்லாவின் மூத்த புதல்வியை திருமணம் செய்தவருமான கைரி ஜமாலுடின் கூறினார்.
பேசுவதற்கு சிரமப்படும் தமது மாமனார் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள்கூட நினைவுகூற முடியாமல் இருப்பதாக கைரி சுட்டிக்காட்டினார். 2003ஆம் ஆண்டு அக்டோபர் நாட்டின் 5ஆவது பிரதமராக பதவியேற்ற அப்துல்லா 2009ஆம் ஆண்டு விலகும்வரை அப்பதவியில் இருந்து வந்துள்ளார். 1979 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை ஏழு தவணைக் காலம் Kepala Batas நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்துள்ளார்.