
கோத்தா கினபாலு, ஜன 19 – சபாவில் நுழையும் அனைத்து வருகையாளர்களும் முன்கூட்டியே கோவிட் பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதோடு தடுப்பூசி சான்றிதழையும் கொண்டிருக்க வேண்டும் என்ற தேவை இன்று முதல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கூட்டரசு நிலையிலான கொள்கைக்கு ஏற்ப விதிமுறைகளை சீராக்குவதற்கு சபா அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக துணை முதலமைச்சர் Joachim Gunsalam தெரிவித்திருக்கிறார். இனி சபாவுக்கு வருகை புரியும் அனைத்து வெளிநாடுகளின் சுற்றுப்பணிகளும் சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள கொள்கைக்கு ஏற்ப ஒருமுகப்படுத்தப்படும் என சபா அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Joachim Gunsalam குறிப்பிட்டுள்ளார்.