Latestஉலகம்

முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கைதாகலாம்

வாஷிங்டன் , மார்ச் 19- அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் ட்ரம்ப் (Donald Trump), தாம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படலாமென கூறியுள்ளார். அதையடுத்து, தமது கைது நடவடிக்கையை கண்டித்து மக்கள் பேரளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அவர் அறைக்கூவல் விடுத்திருக்கின்றார்.

2016 அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, ஆபாச நடிகை, ஸ்டோர்மி டானியல்ஸ் -சுக்கு ( Stormy Daniels ), டிரம்பின் சார்பில் அவரது வழக்கறிஞர் மிகப் பெரிய தொகையை வழங்கிய சம்பவம் தொடர்பில் , அந்த முன்னாள் அதிபர் மீது குற்றம் சாட்டப்படலாமென கூறப்படுகிறது.

76 வயது டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டால், முன்னாள் அதிபர் மீது குற்றவியல் வழக்கு கொண்டு வரப்பட்ட முதல் சம்பவமாக அது விளங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!