Latestமலேசியா

RTS லிங்க் திட்டம்; அன்வாரும், லீ சியென் லூங்கும் பார்வையிட்டனர்

ஜோகூர் பாரு, ஜனவரி 11 – மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான, ஆர்.தி.எஸ் லிங்க் (RTS Link) எனப்படும் அதிவேக போக்குவரத்து இணைப்புத் திட்டத்தை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கும் இன்று நேரில் பார்வையிட்டனர்.

ஸ்துலாங்கிலுள்ள, கடல்வழி மேம்பால இணைப்பில் வாயிலாக, அந்த RTS Link திட்டம், ஜோகூரையும், சிங்கப்பூரையும் இணைக்கும்.

திட்டமிட்டபடி, கடந்தாண்டு, டிசம்பர் 31-ஆம் தேதியுடன், 65 விழுக்காட்டு முன்னேற்றதை எட்டியுள்ள அந்த திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான, இரு நாடுகளின் கடப்பாட்டின் அடையாளமாக, இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

அந்நிகழ்ச்சியில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கும், சிங்கப்பூரின் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட்டும் கலந்து கொண்டனர்.

RTS Link இணைப்பு திட்டம் என்பது, ஜோகூர், புக்கிட் சாகரையும், சிங்கபூரின், வட உட்லண்ட்ஸையும் இணைக்கும், நான்கு கிலோமீட்டர் பயணிகள் இரயில் திட்டமாகும்.

RTS Link இரயில் சேவையில் வாயிலாக, ஒரு மணி நேரத்தில், ஒரு வழிப் பயணத்தில், பத்தாயிரம் பேர் வரை பயணிக்க முடியும் என்பதோடு, இரு நிலையங்களுக்கு இடையிலான பயண நேரம் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே ஆகும்.

2026-ஆம் ஆண்டு டிசம்பரில் முழுப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படும் அந்த திட்டம், மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான இருவழி உறவில், ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!