Latest
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
சென்னை, பிப் 22 – முன்னாள் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது கள்ள ஓட்டுப்போட வந்தவரை தாக்குவதற்கு உத்தரவிட்டது தொடர்பில் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு பிடிபட்ட நபரை அரை நிர்வாணமாக்கி அதிமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக அழைத்து சென்றது தொடர்பில் முன்னாள் சட்ட அமைச்சராக ஜெயக்குமாருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.