
கோலாலம்பூர், மார்ச் 9 – போலீஸ் படையின் முன்னாள் தலைவர் Tan Sri Musa Hassan -னைப் போன்று ஒத்திருக்கும் நபர் ஒருவர் , பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் 3 காணொளிகள் வைரலாகியிருப்பதை அடுத்து , போலீசார் அந்நபர் மீது விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.
அந்த சம்பவம் தொடர்பில் தாங்கள் புகார் பெற்றிருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Datuk Azmi Abu Kassim தெரிவித்தார்.
அதிகம் பகிரப்பட்டிருக்கும் 9 , 10, 56 வினாடிகள் கொண்ட காணொளிகளில், மூசாவைப் போன்று காட்சியளிக்கும் நபர் , சிறுவன் ஒருவன் முன்னிலையில், பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காண முடிகிறது.
அந்த காணொளிகள் வெளியானதை அடுத்து, தனது குடும்ப விவகாரம் தொடர்பில் யாரும் கருத்து வெளியிட வேண்டாமெனவும், அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மூசா எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.