கங்கார், பிப் 17 – முன்னாள் காதலிக்கு புதிதாக காதலன் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல், ஆடவர் ஒருவர், காருக்குள் தன்னை எரியூட்டிக் கொண்ட பரபரப்பு சம்பவம், நேற்றிரவு பெர்லிஸ், கங்காரில் உள்ள Jalan Kampung Syed Omar பகுதியில் நிகழ்ந்தது.
அந்த சம்பவம் தொடர்பில் பொது மக்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்ததாக காங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் Wari Kiew தெரிவித்தார்.
காரலிருந்து ஆடவர் ஒருவர் உடல் எரிந்த நிலையில் வெளியே நடந்து வருவதைக் கண்டு, அவ்வழியே வந்த காரோட்டி உடனடியாக தீயை அணைக்க உதவியதோடு, போலிசுக்கும் தகவல் கொடுத்ததாக அவர் கூறினார்.
இதனிடையே, காதல் தோல்வியால் ஏற்கனவே மனமுடைந்து தற்கொலை முயற்சிக்கும் முயன்றிருந்த தனது மகன், பெட்ரோலை அருந்து விட்டு வீட்டிலிருந்து வெளியேறியதாக அவர் தந்தையும் போலிசில் புகார் கொடுத்திருந்தார்.