கோலாலம்பூர், பிப் 3 – சிறையிலிருந்து அண்மையில் வெளியேறிய முன்னாள் கைதி ஒருவரை பிரம்பால் தாக்கி மரணம் விளைவித்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். மெர்சிங் வட்டாரத்தில் வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டிருந்த அந்த கைதியை இருவர் பிரம்பினால் கடுமையாக தாக்கியுள்ளனர். புரோட்டான் ஈஸ்வரா காரில் வந்த ஆடவர்கள் 37 வயதுடைய முன்னாள் கைதியை நேற்று காலை மணி 7.15 அளவில் தாக்கியதாக Johore குற்றப்புலனாய்வுத்துறையின் தலைவர் Saharinain Jais தெரிவித்தார். ஒரு கடை வீட்டிற்கு முன் நடைபெற்ற அந்த சம்பவம் ரகசிய கண்காணிப்பு கருவியில் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறினார். தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் அந்த நபர் இறந்ததாக நம்பப்படுவதாக Shaarinain Jais தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி15 hours ago