கோலாலம்பூர், பிப் 8 – புக்கிட் அமான் சிறப்பு போலீஸ் பிரிவின் முன்னாள் இயக்குனரின் மகன் சம்பந்தப்பட்ட சாலை விபத்து குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என்று வெளியான தகவலை போலீஸ் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று என செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் AA அன்பழகன் தெரிவித்தார். புகார் கிடைக்கப் பெற்றவுடன் நாங்கள் விசாரணையை தொடங்கினோம் என அவர் விவரித்தார். எந்தவொரு விசாரணையையும் மூடும் அதிகாரம் போலீசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இல்லை. எனவே விசாரணையில் மற்ற தரப்பினர் சம்பந்தப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் அன்பழகன் கூறினார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்12 hours ago