Latestமலேசியா

முன்னாள் துணையமைச்சரும் myPPP தலைவருமான மெக்லின் டெனிஸ் டிகுருஸ் காலமானார்

கோலாலம்பூர், நவ 17 – முன்னாள் செனட்டரும் , துணையமைச்சரும் கடந்த மார்ச் மாதம் myPPP கட்சியின் தலைவராகவும் பதவியேற்ற மெக்லின் டெனிஸ் டிகுருஸ், நேற்று நள்ளிரவு காலாமானார். 67 வயதுடைய மெக்லின் டிகுருஸ் மரணம் அடைந்ததை myPPPயின் மூத்த உதவித் தலைவர்லோக பால மோகன் உறுதிப்படுத்தினார். மெக்லின் டிகுருஸ் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக்கொள்வதாக ஜோகூர் myPPP கிளை முகநூலில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற myPPP கட்சியின் ஆண்டு பேராளர் கூட்டத்தில் மெக்லின் டிகுருஸ் போட்டியின்றி தலைவராக தேரந்தெடுக்கப்பட்டார். செனட்டராக இருந்தபோது
2010 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கிடையே தேசிய முன்னணி நிர்வாகத்தில் அவர் தகவல்,தொடர்பு மற்றும் கலச்சாரத்துறையின் துணையமைச்சராக பதவி வகித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!