Latestமலேசியா

முன்னாள் பத்திரிகையாளர் காஜாங் ஆனந்தன் காலமானார்

கோலாலம்பூர், பிப் 3 – முன்னாள் பத்திரிகையாளரான காஜாங் ஆனந்தன் இன்று காலமானார். தமிழ் நேசனின், தமிழ் ஓசை மற்றும் பெர்னாமா தமிழ் செய்தி பிரிவிலும் ஆனந்தன் நிருபராக பணியாற்றியுள்ளார். 58 வயதான ஆனந்தான் காஜாங்கில் பிறந்து வளர்ந்தவராவார். தொடக்கத்தில் தமிழ் ஓசையில் புகைப்படக்காரராக பணியாற்றத் தொடங்கிய ஆனந்தன் பிறகு நிருபராக பணியாற்றினார். கடந்த சனிக்கிழமை பிற்பகலில் திடீரென உடல் நலக் குறைவினால் காஜாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை மணி 7,45 அளவில் இருதயம் செயல் இழப்பினால் அவர் இறந்தார் என அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தினர்.

அவருக்கு பமேஸ்வரி தேவி என்ற மனைவியும் ஒரு மூத்த சகோதரரும் , மூன்று சகோதரிகளும் உள்ளனர். காஜாங்கில் பிறந்து வளர்ந்தவரான ஆனந்தன் அரசியல் மற்றும் சமூக நலப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர் ஆவார். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ள அவர் நாட்டில் தமிழ் எழுத்தாளர்களின் நூல் வெளியிட்டு விழா மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பழக்கத்தை கொண்டிருந்தார். ஆகக்கடைசியாக கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற்ற தமிழ் நேசன் முன்னாள் பணியாளர்களின் விருந்து நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்பட்டார். அன்றைய தினம் தமது பத்திரிகை அனுபவங்களையும் அவர் தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். மறைந்த ஆனந்தன் அவர்களின் இறுதிச் சடங்கு நாளை வெள்ளிக்கிழமை காலை மணி 11 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை NO 6. Block A, Taman Rasa Sayang, Batu 8. Cheras என்ற முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். அதன் பின் அவரது நல்லுடல் செராஸ் மின் சுடலையில் தகனம் செய்ப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!