
புத்ராஜெயா, பிப்ரவரி-23 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்புடன் தொடர்புடைய 4 அதிகாரிகளை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைதுச் செய்துள்ளது.
அவர்களில் மூவர் வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்ட வேளை, 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட மற்றொருவர் இன்று விடுவிக்கப்பட்டார்.
MACC சட்டத்தின் 16A பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி அதனை உறுதிப்படுத்தினார்.
நாட்டின் ஒன்பதாவது பிரதமரான டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி நேற்று விடியற்காலை வீட்டில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெரா நாடாளுமன்ற உறுப்பினரின் உடல்நிலை, தற்போது சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.