
நாட்டின் 5வது பிரதமரான துன் அப்துல்லா அகமட் படாவி தனது 85வது வயதில் காலமானார்.
டிமென்சியா எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்த நிலையில் இன்று அவர் தேசிய இருதய கழகமான IJNல் இரவு 7.10 மணியளவில் உயிரிழந்ததாக அவரது மருமகன் கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார்.
தனது மனைவி பிள்ளைகளின் பெயர் கூட மறந்துவிட்ட நிலையில் இருந்தது அவரது உடல்நிலை.
பாக் லா என அனைவருக்கும் அழைக்கப்பட்ட அவர், 2003 முதல் 2009 வரையில் பிரதமர் பதவி வகித்தார்.
மிகவும் கனிவாகவும் நியாயமாகவும் நடந்துக் கொள்பவர் என அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.