
அலோர்காஜா, நவ 20 – ஒரு மாதத்திற்கு முன் தனது மனைவியிடமிருந்து விவகாரத்து பெற்ற முன்னாள் மின்னற்படை வீரர் ஒருவர் மலாக்கா சுங்கை உடாங் காட்டு வளப் பகுதியிலுள்ள குட்டையில் இறந்து கிடந்தார். அந்த குட்டைக்கு மீன் பிடிக்கச் சென்ற இருவர் 42 வயதுடைய முஹம்மட் அஸ்வான் இஷாக்கின் உடல் மிதந்து கிடந்ததைக் கண்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன்ட் அர்ஷட் அபு தெரிவித்தார். பகாங், ஃபெல்டா கெராடோங்கை சேர்ந்த முஹம்மட் அஸ்வானின் உடல் அந்த குளத்தின் கரையிலிருந்து 30 மீட்டர் தூரத்திற்கு அப்பால் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆகக்கடைசியாக அந்த ஆடவர் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் தமது முன்னாள் மனைவியுடன் தொடர்புகொண்டதாகவும் அவர் எந்தவொரு நோயின் பாதிப்புக்குக்கும் உள்ளாகவில்லை என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக அர்ஷட் அபு கூறினார்.