Latestமலேசியா

முன்னாள் ACP என கூறிக் கொண்டு மாநிலம் கடக்க விண்ணப்பித்த முதியவர் கைது

கோலாலம்பூர், மே 9 -பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்தில், டத்தோ தகுதியைக் கொண்ட முன்னாள்  ACP உயர் நிலை போலீஸ் அதிகாரி என கூறிக் கொண்டு, மாநிலம் கடப்பதற்கான அனுமதியைக் கோர முற்பட்ட முதியவரைப் போலீசார் கைது செய்தனர்.

65 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் வெள்ளிக்கிழமை போலீஸ் நிலையம் வந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர்  ACP ஃபக்ரூடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

தனது கூற்றை வலுப்படுத்த அந்த ஆடவர் , போலீஸ் சீருடையுடன் இருந்த  புகைப்படம் ஒன்றை கைபேசியின் வாயிலாக காண்பித்துள்ளார்.

எனினும் அதன் தொடர்பான ஆவணங்களை முன் வைக்குமாறு கேட்டுக் கொண்டபோது அவர் அவ்வாறு செய்யத் தவறியதாக, ஃபக்ரூடின் கூறினார்.

அந்த முதியவர் ஒரு நாள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!