கோலாலம்பூர், பிப் 4 – கோலாலம்பூர், Pantai Permai, PPR மக்கள் வீடமைப்புத் திட்ட வீடொன்றின் வாடகை தொகை சமூக வலைத்தளங்களில் பலரது பேசுப் பொருளாகியுள்ளது.
PPR வீட்டின் மாதாந்திர வாடகை 1,400 ரிங்கிட் எனவும், முன் தொகையாக 5,100 ரிங்கிட் செலுத்த வேண்டுமெனவும் பகிரப்பட்டிருக்கும் விளம்பரம் சமூக வலைத்தளவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
வாடகைக்கு விடப்படும் அந்த வீட்டில் தளவாடங்கள், மின்னியல் சாதனங்கள் போன்ற வசதிகளும் இல்லை. இந்நிலையில், PPR வீட்டுக்கான அந்த வாடகை ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லையெனவும், PPR வீட்டிற்கு இந்தளவு வாடகை உயர்வாக இருக்குமா என பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.