Latestஉலகம்

மும்பையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரிமில் மனித விரல்; பெண் அதிரடி

மும்பை, ஜுன் 13 – ஆன்லைன் மூலம் வாங்கிய கோன் ஐஸ்கிரீமில் மனித விரலை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மும்பையில் பெண் ஒருவர் Yummo ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் இருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீமை சாப்பிட்ட போது ஏதோ ஒன்று தவறாக இருப்பதை உணர்ந்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து, கூர்ந்து கவனித்தபோது, அதற்குள் மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதோடு, இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்திருக்கிறார்.

ஐஸ்கிரீமையும் விரலையும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து மேல் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!