Latestஇந்தியாஉலகம்

மும்பையில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்வு

மும்பை, ஜூன் 29 – இந்தியாவின் பெருநகரான மும்பையில் , பருவகால மழையை அடுத்து, இடிந்து விழுந்த 4 மாடி கட்டடத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.

சம்பவத்தின் போது அந்த கட்டடத்திற்குள் 20-க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்ட வேளை, 13 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர். 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தேடல் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

இந்தியாவில் , ஜூனில் இருந்து செப்டம்பர் வரையில் நீடிக்கும் பருவ மழை காலத்தின் போது, பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நிகழ்வது வழக்கமாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!