மும்பை, செப்டம்பர் 23 – மும்பை Garib Rath விரைவு ரயிலில் நேற்று G-17 பெட்டியின் பக்கவாட்டு இரும்புப் பிடியில் பாம்பு ஒன்று தொங்கிக்கொண்டு இருந்ததது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைப் பார்த்த பயணிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதுபற்றிய தகவல் தொடருந்து நிறுவனத்திற்கு, தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசாரும், அதிகாரிகளும் பாதுகாப்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
இந்நிலையில், G-17 பெட்டியிலிருந்த பயணிகள் அனைவரும் மற்ற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டதுடன், அப்பெட்டி மூடப்பட்டது.
இதனிடையே, ரயிலுக்குள் புகுந்த அப்பாம்பு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளது.