
கோலாலம்பூர், பிப் 1 – வரும் ஞாயிற்றுக்கிழமை வரவேற்கப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, முருகன் திருத்தலங்களுக்கு படையெடுக்கும் பக்தர்கள், சமய நெறிகளைப் பின்பின்றி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றும்படி, மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் கணேசன் தங்கவேலு கேட்டுக் கொண்டார்.
முருகனுக்கு உரிய காவடிகளையே பக்தர்கள் ஏந்தி வருமாறு அவர் அறிவுறுத்தினார்.
Interview :
Ganesan Thangavelu, Malaysia Hidu Sangam
இதனிடையே, ஈராண்டுகளுக்குப் பிறகு, சுகாதார கட்டுப்பாடுகள் இன்றி பக்தர்கள் இவ்வாண்டு தைப்பூசத்தை வரவேற்கவிருப்பதால் முருகன் திருத்தலங்களில் கூட்டம் அதிகரித்திரித்திருக்கும். எனினும், மக்கள் முகமூடி அணிவது போன்ற சுய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி கணேசன் கேட்டுக் கொண்டார்.
அதோடு, முருகன் வீற்றிருக்கும் திருத்தலங்களை தூய்மையாக வைத்திருப்பதும் பக்தர்களின் கடமையே என அவர் குறிப்பிட்டார்.