
கோலாலம்பூர், பிப் 2 – முருகனைத் தரிசிக்க வரும் பக்தர்கள், அவன் சன்னதியிலேயே குப்பைகளை விட்டுச் செல்லும் போக்கினால், குப்பை கூளமாக சில பகுதிகள் காட்சியளிப்பதை ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் நம்மால் காண முடிகிறது.
மக்களின் பொறுப்பற்ற செயலினால் கூடும் அந்த குப்பைகள் தொடர்பில் புகார்கள் அதிகம் பெறப்படும் நிலையில், முருகன் திருத்தலங்களை தூய்மையாக வைத்திருக்க மீண்டும் வந்திருக்கின்றனர் ‘Clean Thaipusam’ குழுவினர்.
ஆற்றங்கரையில் நீராடி பால்குடங்களையும், காவடிகளையும் எடுத்துச் செல்பவர்கள் , பூஜைக்காக கொண்டு வந்த பழங்களை அப்படியே நதிக்கரையிலே விட்டுச் செல்கின்றனர்.
அந்த பழங்களைச் சேகரித்து, பிராணிகள் சரணாலயங்களுக்கு Clean Thaipusam குழுவினர் வழங்கவுள்ளனர்.
அந்த வீசப்படும் பழங்களைச் சேகரித்து, பிராணிகளின் சரணாலயங்களுக்கு கொண்டு செல்வதற்கும், ஆற்றங்கரையில் கூடும் குப்பைகளை அகற்றவும் அக்குழுவினருக்கு தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் Clean Thaipusam முகநூல் அகப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள கூகல் பாரத்தின் வழியாக தங்களைப் பதிந்து கொள்ளலாம்.